வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட பேரூந்து முனையம் அமைக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.எஸ்.டி சாலை வழியாக சென்றார்.

தாம்பரத்தில் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் தண்டே மேளம் முழங்க கருப்பு சிவப்பு பலுன்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

மண்டலகுழு தலைதலைவர்கள் காமராஜ், இந்திரன், ஜெயபிரதீப் சந்திரன், ஊராட்சிமன்ற தலைவர்கள் ஜனனிசுரேஷ், வேல்முருகன், கவுன்சிலர்கள் ஜெகன், சுரேஷ், உள்ளிட்டவர்களும் முதலமைச்சருக்கு பூங்கொத்து, சால்வைகள், புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். முதலமைச்சர் வாகனத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.

முதலமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தைக்கு பெயர் சூட்டவேண்டும் என மண்டலகுழு தலைவர் காமராஜ்க்கு கோரிக்யை வைக்க குழந்தயை கையில் தூக்கி உதயசூரியன் என பெயரிட்டு அழைத்து பெயர்சூட்டினார். இதனை கண்ட அங்குள்ள திமுகவினர் மகிழ்ச்சியில் கைத்தட்டி வரவேற்றனர்.