தொண்டை புற்றுநோய் சிகிசைகாக விமானம் மூலம் சென்னை வந்த நோயாளி உள்ளிட்ட 3 பேர் அதிகாலை ஆட்டோவில் சென்று குரோம்பேட்டையில் இறங்கி சென்றனர். அதே வேலையில் அவர்களில் பாஸ்போர்ட், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை ஆட்டோவில் தவறவிட்டு சென்றனர். இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்த போதே ஆட்டோவை ஓட்டி சென்ற ஓட்டுனர் தாம்பரம் கடப்பேரியை சேர்ந்த ரவி என்பவர் சம்மந்த பட்ட நபருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பணம் ஒருலட்சத்து 40 ஆயிரத்தை உரியவரிடம் ஓப்படைத்தார். மேலும் அந்த நேர்மையான ஆட்டோ ஓட்டுனர் ரவி பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டினாலும் ஐ.டி நிறுவனத்தில் முழு நேரமாக பணியாற்றியவர் என தெரிந்தது. இதனையடித்து தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் ரவியின், நேர்மையை பாராட்டி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழுடன், வெகுமதியும் அளித்து பாராட்டினார்…