
15 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் களமிறங்கிய விராட் கோலி ஆந்திர அணிக்கு எதிராக 131 ரன்கள் எடுத்தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தனது 330-வது இன்னிங்ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 391 இன்னிங்ஸ்களில் 16 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார்.