சென்னை வண்டலூர் அடுத்த மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் திருநங்கை ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திருநங்கை உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர்,
விசாரனையில் நாகபட்டினத்தை சேர்ந்த வேல்முருகன் என்கிற அனன்யா (35) என்பதும் இன்று அதிகாலை அவ்வழியாக வந்த ராமேஸ்வரம் விரைவு ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது, மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
