• கள ஆய்வில் புதிய திருப்பம்!

வட சென்னை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., என மும்முனை போட்டி நடக்கிறது.

இந்த மூன்று கட்சி வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள்.

இந்த மூவருக்கும் தேர்தல் களம் என்பது புதிதும் அல்ல.

தற்போது கள ஆய்வில் வந்த தகவலின் படி
எவ்வளவுதான் பா.ஜ.க., வேட்பாளர் பால் கனகராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் எவ்வளவு போராடினாலும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது என நேற்று பதிவு செய்யப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக அதிமுக.,வின் அலை தற்போது வீசத் தொடங்கி உள்ளது. அதிமுக.,வினர் எழுச்சி பெற்று உள்ளனர்.

வடசென்னையின் தற்போதைய கள ஆய்வு திமுக – அதிமுக கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.