சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஸ்ரீநிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி உறவினர் நிகழ்ச்சிக்காக சென்றவர் அடுத்தநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இரண்டு சவரன் தங்க நகைகள் திருடபட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்ட நிலையில்,

கைரேகை நிபுறனர்களை கொண்டு சோதனை செய்த போது திருட்டில் ஈடுபட்டவர் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித் என்கிற கானா அஜித் என்பதுனம் ஏற்கனவே சேலையூர்,பீர்கன்காரனை,தாம்பரம் போன்ற காவல் நிலையங்கள் எல்லைக்குட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதால் குண்டாஸ் வழக்கு பதிவு செய்தது சிறைக்கு சென்றுவிட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாடம்பாக்கம் வீட்டில் இருந்த அஜித்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.