
தேவையான பொருட்கள்: மொச்சை-1 கப், கத்திரிக்காய்-3, வெங்காயம்-1, தக்காளி-1, பச்சை மிளகாய்-2, பூண்டு-4 பல், மஞ்சள் தூள் – டீஸ்பூன், மிளகாய் தூள்-1 டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு, கடுகு- டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன், கருவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: முதலில் மொச்சையை நன்றாக கழுவி, சிறிது உப்பு சேர்த்து அரை வெந்துவரை வேக வைத்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பிறகு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.தக்காளி சேர்த்து மெல்லியதாக ஆகும் வரை வதக்கவும்.இப்போது நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கலக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.கத்திரிக்காய் பாதி வெந்ததும், வேக வைத்த மொச்சையை சேர்த்து நன்றாக கலக்கவும்.மூடி வைத்து மிதமான தீயில் 8&10 நிமிடங்கள் வேகவிடவும். இறுதியாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சூப்பரான மொச்சை கத்திரிக்காய் பொரியல் ரெடி.