சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பராசக்தி நகரை சேர்ந்தவர் ராசாத்தி (77) இவரின் வீட்டை சுத்தம் செய்வதற்காக ராஜாஜி நகரை சேர்ந்த முனியப்பன் என்பவர் நேற்று காலை வந்துள்ளார்.

அப்போது வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த முனுசாமி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகை மற்றும் காதில் இருந்த கம்மல் ஆகியவற்றை பறித்துவிட்டு அருகில் இருந்த சாக்கடையில் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து தனிபடை அமைத்த போலீசார் இரண்டு மணி நேரத்தில் இந்திர நகர் மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்த முனியப்பனை சுற்றி வளைத்து கைது செய்தனர் பின்பு திருடிநகளை குறித்து போலீசார் கேட்டபோது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ஐந்தரை சவரன் தங்கநகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.