போலீசை குழப்ப ஒ.எல்.எஸ் ஆப்பில் விற்பனைக்கு பதியும் எண்களை தனது பல்சருக்கு பயன்படுத்திய செயின் பறிப்பில் ஈடுபடும் பலே கொள்ளையன்

சென்னை-வேலூர்- சென்னை என 350 கி.மீ தூரம் 2ஆயிரம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொளையனை பிடித்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

30 ஆண்டுகளாக 35 வழக்குகளில் சிக்கி இரண்டு பெயரில் வலம் வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் 17ம் தேதி நடைப்பயிற்சி சென்ற சாந்தகுமாரி(59) கழுத்திலிந்து பல்சர் பைக்கில் வந்த ஹெல்மெட் போட்ட வழிப்பறி கொள்ளையன் 5 சவரன் செயின் பறிந்து சென்றான்.

இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணியப்பன் தனிப்படை அமைத்தார்.

அந்த தனிப்படை அருகில் இருந்த சிசிடிவி கேமரா கட்சிகளை பார்த்தபோது புகாரில் கூறியபடி ஹெல்மெட் போட்ட நபர் பல்சர் என்பது தெரிந்தது. அதன் பதிவு எண்ணை குறித்த போலீசர் தஞ்சாவூர் அட்ரசை சேர்ந்தது என தெரிந்ததால் எளிதில் பிடிக்கலாம் என எண்ணி சென்ற போலீசுக்கு பைக்கின் உரிமையாளர் நானும் என் பைக்கும் சென்னைக்கு வரவே இல்லை என கூறியதால் எமாற்றம் அடைந்தனர்.

அதே வேளையில் பல்சர் பைக் விற்பனை என்பதை ஒ.எல்.எஸ் ஆப்பில் பதிவு செய்ததை அந்த உரிமையாளர் காட்டி தகவல் கொடுத்துள்ளார்.

அப்போது சிட்லப்பாக்கம் போலீசுக்கு ஏதோ பெருசா போகும் என பொரி தட்டியது.

இதனால் மீண்டும் குரோம்பேட்டை எம்.ஐ.டி ல் இருந்து சிசிடிவி காட்சிகளை பின் தெடர்ந்தனர். பல்லாவரம், குன்றத்தூர், காஞ்சிபுரம் காவேரிபாக்கம் என வேலூர் வரை சென்ற அந்த பல்சர் ஒட்டுனர் எங்கேயும் முகத்தை காட்டாமல் ஹெல்மெட் மாட்டியவாறு சென்றுள்ளார். அதனால் ஆள் குறித்து அங்க அடையாளம் இல்லாமல் மீண்டும் சென்னை மாதவரம் வரை திரும்பிய நிலையில் போலீஸ் தனிப்படையும் அதனை பின் தெடர்ந்து திரும்பியுள்ளது.

இந்த நிலையில் 5 நாட்கள் கழிந்து 22ம் தேதி அதே சிட்லப்பாக்கத்தில் சாந்தி என்கிற பெண்ணின் கழுத்தில் இருந்து பல்சர் வாகனத்தில் ஹெல்மெட் கொள்ளையன் கைவரிசை என புகார் வந்தது. ஆனால் ஹெல் மெட் மாற்றிய அந்த கொள்ளையன் கால் சட்டை மாற்றாமல் உள்ளதால் உடல் பாவனையை வைத்து அதே கொள்ளையன் என தெரிந்ததால் மாதவரத்தில் கடைசிய சுற்றித்திரிந்ததை பின் தொடர்ந்தபோது ஆட்டோ ஒன்றில் பயணித்த காட்சி கிடைத்து. அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்தபோது அவர் காட்டிய வீட்டில் பதுங்கிய நபரை காவல் நிலையம் அழைந்து வந்து விசாரித்தபோது தான் போலீசாரே அசந்துபோகும் 30 ஆண்டு காலமாக கொள்ளையே தொழிலாக செய்யும் பலே கொள்ளையன் என்பதும் அவன் பெயர் சசி-52 என்றும் கேரளா மாநிலம் கொள்ளம் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதும்,

ஏற்கனவே 1995 முதல் 1999 வரை குரோம்பேட்டை, பல்லாவரம், பூந்தமல்லி உள்ளிட்ட காவல் நிலையங்களில் டேவிட் பிஜி என்கிற பெயரில் போலீசில் திருட்டு வழக்குகளில் சிறை சென்றதும் தெரிய வந்தது.

மேலும் அவன் குறித்து புகைப்படத்துடன் தேசிய அளவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில குற்றப்பிரிவு போலீசார் வாட்ஸ் ஆப் குருபில் பதிவிட்ட நிலையில் கேரளா மாநிலத்தில் 2000 ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை வழிப்பறி கொள்ளை வழக்குகள் என 30 வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிட்லப்பாக்கம் போலீசார் ஏற்கனவே சென்னை முதல் வேலூர் வரை சென்று மீண்டும் சென்னை என 350 கி.மீ தூரத்திற்கு 2000 ஆயிரம் சிசிடிவி பதிவுகளை பார்த்த நிலையில் வழக்குகள் எண்ணிக்கையும் மாநிலம் விட்டு மாநிலம் என 30 ஆண்டு காலத்தில் 35 க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஈடுபட்டுள்ள போது திருந்தாமல் போலீசாரை குழப்ப ஓ.எல்.எஸ் ஆப்பில் வரும் வாகன பதிவெண் மாற்றிக்கொண்டு குற்றச்செயலில் ஈடுபடும் நபர் சசியை காவல் நிலையத்தில் வழுக்கி விழாமல் பதமாக நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைந்தனர்.