
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் குடிபோதையில் சாலை படுத்து உருண்ட ஆட்டோ ஓட்டுனர், ஓரங்கட்டி படுக்க வைத்து போதை தெளிந்ததும் பொதுமகளுக்கு இடையூறு வழக்கு பதிவு
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கன் ஜோதி நகரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் குடிபோதையில் அங்குள்ள ஓட்டலில் தகறாறு செய்துள்ளார்.
இதனால் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் அளித்த புகாரில் சேலையூர் போலீஸ் கந்தன் உள்ளிட்டோர் சென்றனர்.
போலீசை கண்டதும் சாலையில் படுத்து கொம்பு சுழற்றுவதுபோல் கால்களால் போலீசை எட்டி உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் போலீசர் பொதுமக்கள் உதவியுடன் போதை ஆட்டோ ஒட்டுனரை ஓரங்கட்டி படுக்க வைத்த நிலையில் அவரின் ஆட்டோவை மட்டும் சேலையூர் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை போதை தெளிந்து சேலை காவல் நிலையம் சென்ற ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்தபோது சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த பாலகுமார்(35) என்பதும் போதையில் தவறு செய்ததாக போலீசாரிம் மன்னிப்பு கேட்டார். போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பினார்கள். மேலும் ஆட்டோவின் உரிமையாளரையும் அழைத்து விசாரிக்கவுள்ளனர்.
இந்த வீடியோவை சிலர் பதிவு செய்து சமுக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததால் பரபரப்பாக பேசப்பட்டது.