இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில் பொங்கல் இலவச வேட்டி சேலை ஐனவரி 10ம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறிதுறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.