
ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது.
லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலால் வரி நீக்கத்தால் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல் – டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதே நேரம் இது விலை உயர்வை தடுக்கும் நடவடிக்கையாகும்.
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதை தடுக்கும் முயற்சியாக இந்த கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.