தாம்பரம் அருகே புது பெருங்களத்தூரில் செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 9 பேசிக் செல்போன், ஐந்தாயிரம் ரொக்க பணம் உட்பட பல்வேறு பொருட்கள் கொள்ளை

சென்னை அடுத்த தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போம் கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கடையின் உள்ளே இருந்தவாறு 9 பேசிக் மாடல் செல்போன்கள், கல்லாவில் இருந்த ஐந்தாயிரம் ரொக்க பணம் மற்றும் புளுடூத், பவர் பேங்க் போன்றவற்றை திருடி அங்குள்ள கைப்பையில் தினித்தவாறு வெளியேறி சென்றனர்.

இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.