
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மாம்பழம் சின்னம் பாமக தொண்டர்களின் அடையாளம். அது யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக் கொள்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதம்” என்று கூறியுள்ளார்.