பாஜகவுடன் கூடா உறவு வைத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவரும்,

தேசத்தை சீரழித்த பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது அதிமுக கட்சி, படப்பை அருகே இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை பேச்சு:-

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் படப்பை அடுத்த கரசங்காலில் நடைபெற்றது.

இதில்
இந்தியா கூட்டணி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் க.செல்வம் ஆகியோர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன்ன் அறிமுகப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை,
சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலஷ்மி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி இந்தியா கூட்டணிகட்சியினர் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை:-

பாஜகவுடன் கூடா உறவு வைத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவரும்,

சமுக நீதி அடிப்படைகாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் முதல் முதல் குரல் கொடுப்பதாக பாமக சொல்லி கொண்டது.

ஆனால்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பாஜக பேசுகிறது இது முற்றிலும் முரணாக உள்ளது.

அப்போ என் ஜாதிகாக எந்த மொழிக்காக, எந்த இனத்திற்காக பாமக இருக்கிறது என இளைஞர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது,

தேசத்தை சீரழித்த பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது அதிமுக கட்சி உதய் மின் திட்டம், நீட் தேர்வு, பாஜக கொண்டு வந்த மக்கள் பாதிப்பு திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டது அதிமுக பாஜக கூட்டு களவாணிகள் களம் காணுகிறார்கள்.

தற்போது தமிழ்நாட்டில் இரண்டே கூட்டணிதான் உள்ளது ஒன்று திமுக மற்றொன்று பாஜக கூட்டணி என்றார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் பிரதமர் மோடி, முன்னால் முதலமைச்சர் பழனிச்சாமி

10 ஆண்டுகளாக கஜான கொள்ளையடித்த நிலையில் கொரோனா எனும் கொடிய காலகட்டத்தில் திமுக ஆட்சியை ஏற்று கொடுத்த வாக்குறுதியை இரண்டு ஆண்டுகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றி புது திட்டங்களையும் கொடுத்தவர் திமுக தலைவர் என்றார்.

அதனால் மிகபெரிய ஜனநாயக வாதியான ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.பாலு, அவர் நிழலாக உள்ள காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம் ஆகியேரை மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்திட வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை பேசினார்.

பின்னர் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- 5 ஆண்டுகளாக தமிழகத்தில் கூட்டணி ஒற்றுமையாக செயல்படுகிறோம், மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க காத்துள்ளனர். அதனால் எதிர் அணியினரை டெப்பாசீட் இழக்க வைக்கும் விதமாக தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்றார்.