பெங்களூர் அருகே 85 வயது மூதாட்டி குரங்குகளுக்கு உணவளித்து வந்தார். அவர் சமீபத்தில் காலமானார். இதனை தொடர்ந்து அங்கு வந்த ஒரு குரங்கு அவரது உடலை கட்டி தழுவி இறுதி அஞ்சலி செலுத்தியது. குரங்கு மூதாட்டியை கட்டி தழுவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளன.