பல்லாவரம் அடுத்த அனகாபுத்துரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன்(19), சேலையூர் பாரத் கல்லூரியில் மெக்கனிக்கல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலம் உணவு விநியோகம் செய்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கிவிசப்பட்ட மகேஸ்வரன் தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து கார் ஓட்டுனர் பல்லாவத்தை சேர்ந்த முருகேசனிடம் விசாரணை செய்து வருகிறார்கள்…