
தேவையான பொருட்கள்:- நாட்டு பூண்டு பல் – 50, தக்காளி- 1 (பெரியது), சின்ன வெங்காயம் -200 கிராம் (உறித்தது), மிளகாய் தூள் -2 ஸ்பூன், மல்லித்தூள் – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் -கால் ஸ்பூன், நாட்டு சர்க்கரை -அரை ஸ்பூன்,புளி – பெரிய கோலிக்குண்டு அளவு, நல்லெண்ணெய் -3 ஸ்பூன், வெந்தயம், சோம்பு (பெருஞ்சீரகம்), கருவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை:- அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் வெந்தயம், சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கிய உடன் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்திருக்கும் புளிக்கரைசலை வடிகட்டி ஊற்றவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரையையும் சேர்க்கவும். மீதமுள்ள ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு கொதிக்கவிடவும். கிரேவியாக வரும் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். சுவையான பூண்டு குழம்பு தயார்.