சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் திரைப்பட நடிகரின் வணிக வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீவிபத்து, இரண்டு கடைகள் எரிந்து நாசம்

சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் திரைப்பட நடிகர் பாபு கணேஷ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்படுகிறது.

இதில் பல்பொருள் அங்காடி முன்பாக டீ கடையில் காலை டீ போட்டபோது எரிவாயு சிலிண்டர் கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. அதில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ பறவியதில் டீ கடை, ஜீஸ் கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

தகவல் அறிந்துவந்த சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் அணைத்ததால் மற்று வணிக கடைகளுக்கு தீ பறவாமல் தடுக்கப்பட்டது.

இதனால் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நாவலூர் ஓ.எம்.ஆர்.சாலையில் பரபரப்பு காணப்பட்டது.