தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன.

இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.