அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோம் என தெரிந்ததால் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மாநிலங்களவை எம்.பி. ஆகியுள்ளார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன. இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை […]
3 மாநிலத்துல ஜெயிச்சும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற முடியாத பரிதாப பாஜக! ஆதாயமடையும் காங்!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் 3 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜகா. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிவிட்டது. ஆனாலும் ராஜ்யசபாவில் பாஜகவால் பெரும்பான்மை எம்.பி.க்களைப் பெற்று விட முடியாத பரிதாப நிலைதான் உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக வென்றது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் […]
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது

5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
மேற்குவங்க மாநிலத்தில் துபுகுரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கைவசம் வைத்திருந்த தொகுதியை கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. நுஸ்ரத் ஜஹான் செப்.12-ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. நுஸ்ரத் ஜஹான் செப்.12-ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. குடியிருப்பு விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியா கூட்டணி மன்னிப்பு கோர வேண்டும்

திமுக சனாதன தர்மத்தை தாக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மெளனமாக உள்ளது இந்தியா கூட்டணி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் ராஜ்நாத் சிங்
காங்கிரஸ் தேர்தல் கமிட்டி குழு அமைப்பு!

16 பேர் அடங்கிய தேர்தல் கமிட்டி குழு அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் குழு. சோனியா காந்தி, ராகுல்காந்தி, அம்பிகா சோனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதிரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி பேசியது …வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு

மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஹிந்துத்வாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இந்த மாநிலங்களில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. அமைச்சரின் இத்தகைய பேச்சு அந்த மாநிலங்களில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளன. இது வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் காங்குக்கு எதிராக திரும்பும் என அக்கட்சி தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மஹாராஷ்டிராவின் காங். தலைவர் நானா படோல் ”உதயநிதிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது அவரது […]
கேரள அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கியில் முழு கடை அடைப்பு போராட்டம்

கேரள அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கியில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலவரம்பு சட்ட விதியின் கீழ் கட்டடங்கள் கட்ட விதித்த தடையை விலக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள நிலப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை எனவும் கேரள காங். கட்சி புகார் தெரிவித்துள்ளது. போராட்டம் காரணமாக இன்று மாலை 6 மணிவரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்; போக்குவரத்து எதுவும் இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.