
திருப்பதியில் அளவு கடந்த கூட்டம் காரணமாக நீண்ட கியூ வரிசையில் பக்தர்கள் புதிதாக நிற்பதற்கு நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
கூட்டத்தின் அளவை பொறுத்து நாளை காலை 6 மணிக்கு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுபவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை படி வரிசையில் கடைசியாக நிற்கும் நபர் 30 மணி நேரம் கழித்து தான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு என தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்திருப்பதாக கூறப்படுகிறது.பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.