மதுரை திமுக எம்எல்ஏ கோ.தளபதி காங்கிரஸ் கட்சியையும், கரூர் எம்.பி. ஜோதிமணியையும் விமர்சித்துப் பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து எம்.பி. ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பது: திமுக எம்எல்ஏ கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள். நான் கரூரில் இருக்கிறேன்.எங்களைத் தொடர்ந்து தாக்கிப் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறினார்.