தாம்பரத்தில் இருசக்கர வாகனதின் மீது மினி லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை உயிரிழப்பு. அங்குள்ள சிசிடிவி காட்சி வெளியான பரபரப்பு

சென்னை அடுத்த வெள்ளவேடூ பகுதியை சேர்ந்த 60 வயது பெண்மணி சிவபூஷனம், கண் சிகிச்சை பெற வெள்ள வேட்டில் இருந்து அவரின் அண்ணன் ஆனந்தனுடன் சேலையூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு ( பாரத் கண் மருத்துவமனை ) இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் மீண்டும் வெள்ள வேடூ செல்ல தாம்பரம் சி.டி.ஒ காலணி சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது கார் ஒன்று திரும்ப நின்ற நிலையில் அதன் பின்னர் வந்த இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் சிமெண்ட் பேவர் பிளாக் கற்களை ஏற்றிசென்ற மினி லாரி இடது பக்கமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சிவபூஷ்ணம் தலையில் மினி லாரியின் பின்சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லேசான காயமடைந்த அனந்தன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

சிவபூஷ்ணத்தின் உடலை கைப்பற்றிய போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடற்கூறு ஆய்வுகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில்,

மினி லாரியை விட்டு சென்ற ஓட்டுனர் ராஜா(32) என்பவரை தேடி வருகிறார்கள்.

விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணணுடன் கண் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் அண்ணன் கண் முன்னே தங்கை தலை நசுங்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.