
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் மீண்டும் வந்த பார்த்த போது கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த ஆறு சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கபட்டதை கண்டு அதிர்ச்சியடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,

சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்த போலீசார் பல குற்ற வழக்கில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த குட்டி என்கிற மணிமாறமன்,நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் பிரவீன் என தெரிய வந்தது,
மேலும் ஏற்கனவே ஸ்ரீகாளஹஸ்தி டவுன் பகுதியில் வழக்கு ஒன்றில் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கபட்டிருப்பது தெரிய வந்துள்ளது,
தொடர்ந்து அவர்களை காவலில் எடுத்து விசாரித்த போலீசார் அவர்களிடமிருந்து ஐந்து சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.