தாம்பரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.30 மணி முதல் பிறபகல் 1.30 மணி வரை மின்சார ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது.

இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரையிலும், அதுபோல் பல்லாவரத்தில் இருந்து கடற்கரை வரையிலும் குறிப்பிட்ட 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.

அதுபோல் திருமால்பூர், செங்கல்பட்டு மார்கமாக கூடுவாஞ்சேரி வரையிலும் மறு மார்கத்தில் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மார்க்கமாக குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் என சிறப்பாக இயக்கப்படுகிறது. இதனால் இரு தடத்திலும் குரோம்பேட்டை, சனாடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு மின்சார ரெயில்கள் தடைப்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க மாநகர பேரூந்துகள் பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கூடுதலாக 20 பேரூந்துகளும், அதுபோல் பல்லாவத்தில் கிளம்பாக்கத்திற்கு 10 பேரூந்துகளும் இயக்கப்படுகிறது.

மேலும் பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் ஜி.எஸ்.டி சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்கள் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 275 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் நெரிசல் பகுதியில் இரும்பு தடுப்புகளை ஏற்படுத்து பேரூந்து நிறுத்தம் செல்லும் பேரூந்துகளை மட்டும் ஓரமாக அனுப்பி நெரிசலை கட்டுப்படுத்திவருகிறார்கள்.