தாம்பரத்தில் ரயில் சேவை ரத்தால் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.30 மணி முதல் பிறபகல் 1.30 மணி வரை மின்சார ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரையிலும், அதுபோல் பல்லாவரத்தில் இருந்து கடற்கரை வரையிலும் குறிப்பிட்ட 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. அதுபோல் திருமால்பூர், செங்கல்பட்டு மார்கமாக கூடுவாஞ்சேரி வரையிலும் மறு மார்கத்தில் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மார்க்கமாக குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் என சிறப்பாக இயக்கப்படுகிறது. […]

குரோம்பேட்டையில் தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவர் பலி

பல்லாவரம் அருகே கவனகுறைவாக தண்டவளத்தை கடந்த போது மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரழந்தார். சென்னை பல்லாவரம் ,குரோம்பேட்டை ரயில் நிலையம் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தலைசிதைந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சோதனை செய்த போது அவர் வைந்திருந்த ஏ.டி.எம் கார்டு கொண்டு விசாரனை செய்தில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் (20) என்பதும் சென்னையில் உள்ள தனியார் […]

செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் பலி

பல்லாவரம் அருகே மின்சார ரயில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நேற்று இரவு இறந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்திய விசாரனையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (40) என்பதும் நேற்று […]

தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளத்தின் அடித்தளம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும்

திரிசூலம் – மீனம்பாக்கம் தண்டவாளத்தில் விரிசல்

இன்று காலை சென்னைகடற்கரை மார்கமாக சென்ற மின்சார ரெயில் திரிசூலத்தை கடந்து மீனம்பாக்கம் செல்லும் முன்பாக தீடீரென தண்டவாளத்தில் ஓசை கேட்டுள்ளது. இதனால் ரெயில்வே அதிகாரிகளுக்கு ஒயர்லெஸ் மூலம் தவல் அளித்தால், அடுத்து அடுத்து பின் தொடர்ந்த மின்சார ரெயில்கள் ஆங் ஆங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சென்னை கடற்கரை மார்கமாக ரெயில் சேவை பாதிப்பு அடைந்தது. அதனையடுத்து ரெயில்வே தொழில் நுட்ப அதிகாரிகள் ஊழியர்கள் விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று தற்காலிகமாக தண்டவாளத்தை கிளாம்ப் மூலம் இணைத்து […]

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலால் தண்டவாளம் உடைந்ததால், புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்

9 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், முதற் கட்டமாக நான்கு பெட்டிகளை அகற்றம். துண்டு துண்டுகளாக உடைந்த தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளத்தை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் விரைவில் தொடக்கம்

இது சென்னை எழும்பூரிலிருந்து தமிழகத்தின் தெற்கு பகுதிகளுக்கு மேலும் அதிக ரயில் சேவைகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்படும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் இதை செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். 4.3 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் .279 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை எழும்பூரை வடக்கு நோக்கி செல்லும் ரயில்களின் இன்னொரு […]

சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27ம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தம்

கடற்கரை – எழும்பூர் இடையே ₹279 கோடி செலவில் 4வது ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது; 7 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை சென்ட்ரல் வந்த ரயில் நிறுத்தம்

போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயில், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, திருநின்றவூர்- நெமிலிச்சேரி ரயில் நிலையங்கள் இடையே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.