தென்​மாவட்​டங்​களின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து சென்​னைக்கு வாக​னங்​கள் படையெடுத்​த​தால், செங்​கல்​பட்டு அருகே பரனூர் சுங்​கச்சாவடி பகு​தி​யில் நேற்று காலை முதல் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதுத​விர சிங்​கப்​பெரு​மாள்​கோ​வில், மறைமலை நகர், கூடு​வாஞ்​சேரி, கிளாம்​பாக்​கம், பெருங்​களத்​தூர், தாம்​பரம் உள்​ளிட்ட புறநகர் பகு​தி​களி​லும் ஓஎம்​ஆர், ஈசிஆரிலும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதனால் இன்று காலை வரை செங்​கல்​பட்டு மாவட்ட மற்​றும் சென்னை மாநகர போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீரமைக்​கும் பணி​களில் ஈடு​பட்​டனர்.