
நம்முடைய தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளார்கள்.
ஆனால், நமக்கு தற்போது தேவையாக உள்ளது நல்ல தலைவர்கள் தான்.
நான் தலைவர்கள் என்று சொல்வது அரசியல் மட்டுமல்ல; ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை.
எதிர்காலத்தில் அரசியல் துறையும் ஒரு விருப்பமாக இருக்க வேண்டும்.
நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் தானே? நீங்களே சொல்லுங்கள்.
அரசாங்கத்தை விட நம்ம Lifeஐ நாமதான் பார்த்துக்கணும்.
உங்களுடைய மனக்கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கத்தை வளர்த்துக்குங்க.
இப்போதைக்கு நல்லா படிங்க, மத்தத அப்பறம் பார்த்துக்கலாம்.
பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில்தான்; எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்.
உங்களுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள்- கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு.
போதைப் பழக்கத்திற்கு எதிராக மாணவர்களை
’say no to temporary pleasures, Say no to Drug’
உறுதிமொழி ஏற்க வைத்த விஜய்.