விஜய் கட்சி பாஜக அணியில் சேர்ப்பா? அமித்ஷா பதில்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பா.ஜ.க கூட்டணியில் சேர்வாரா என்று மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன அப்போதுதான் இது பற்றி தெளிவாக தெரியும். கட்சியில் நடிகர்களை சேர்ப்பது குறித்து உள்ளூர் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்

விஜய் கட்சியில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள்

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் இளைஞர்கள் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்தது இதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களை நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளன ர்.விரைவில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜய் மீண்டும் பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

.இது தமிழ் பண்பாடா? வேல்முருகனுக்கு கண்டனம்

நடிகர் விஜய் குறித்து வேல்முருகன் பேசியதற்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் விஜய்யை அண்ணா என அழைப்பது அன்பின் வெளிப்பாடு என கூறியுள்ளார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு, அந்த உறவை கொச்சைப்படுத்துவது, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் மனதை புண்படுத்தும் செயலாகும் என சாடியுள்ளார். மேலும் இது தமிழ் பண்பாடும் அல்ல, மனிதநேயமும் அல்ல என்றும் விமர்சித்துள்ளார்.

திமிர் பிடித்த திமுக ஆட்சி

விஜய் தாக்கு வியாசர்பாடியில் த.வெ.கவினர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தவெக சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும்,” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் […]

வேலூரில் விஜய் கட்சியில் பூத் கமிட்டி மாநாடு

நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாட்டை கோவையில் வெற்றிகரமாக நடத்தினார். தற்போது அடுத்த மாநாட்டை வேலூரில் நடக்க திட்டமிட்டுள்ளார். இதில் தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.

கடைசி படத்தில்போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். இருந்தாலும் கடைசியாக அவர் ஜனநாயக ன் என்ற படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல் ஈடுபட போவதாக கூறியுள்ளார் இந்த படத்தில் அவர் என்னிடத்தில் நடிக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அவர் போலீஸ் வேடத்தில் அந்த படத்தின் நடிப்பதாக தெரியவந்துள்ளது.

விஜய் தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி”

எந்த கட்சியுடனும் தற்போது வரை கூட்டணி தொடர்பாக பேசவில்லை; தவெக தலைமையில் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்”அதிமுக உடன் கூட்டணி என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், தவெக தரப்பில் விளக்கம்

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும், மாநில அரசு கோரியுள்ள பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்று விஜய் தனது மனுவில் கோரியுள்ளார்.

தவெக மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகளை நுண்ணறிவு பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்ததாக தகவல்

சென்னையில் இருந்து நிர்வாகிகள் எவ்வளவு பேர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்து தகவல்கள் சேகரித்து வருவதாக தகவல் சென்னையில் தவெக தொண்டர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருவதாக தகவல்.

தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்கும் நடிகர் விஜய் செல்வதற்காக பிரத்யேக சாலை அமைப்பு

கூட்ட நெரிசலில் விஜய் சிக்காமல் இருக்க, சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை நேரடியாக கொடியை ஏற்றிவிட்டு, மாநாட்டுத் திடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு மேலும் விஐபிகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனி சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது