தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபியை
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் தீடீரென மாற்றப்பட்டு செயற்கையான காலியிடம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தில் சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் முறைகேடுகள் எதுவும் நிகழும்பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சுனில்குமார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கடந்த காலங்களில் செயல்பட்டதாகவும் அதற்கு பிரதிபலனாகவே தற்போது அவர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கூறுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதன் அடிப்படையில் சுனில் குமார் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது தொடர்பாக விளக்கம் கேட்க வேண்டுமெனவும் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.