சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவால் நடக்கிறது: டிஜிபி சங்கர் ஜிவால்
99% சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவாலும், விழிப்புணர்வு இல்லாததாலும்தான் நடக்கிறது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு மட்டுமே சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் என ஜிவால் கூறினார்.
எஸ்ஐடி குழு நாளை திருப்பதி செல்கிறது
லட்டு பிரசாதம் கலப்படம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு எஸ்ஐடியை நியமித்துள்ளது டிஐஜி சர்வ ஸ்ரேஸ்ட் திரிபாதி உள்ளிட்ட எஸ்ஐடி குழு நாளை திருப்பதி செல்கிறது முதல் ஏஆர் டைரியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை எஸ்ஐடி மேற்கொள்ளும் எஸ்ஐடி ஏற்கனவே டிஜிபியை சந்தித்து விசாரிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளது
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபியைதமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் தீடீரென மாற்றப்பட்டு செயற்கையான காலியிடம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தில் சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் […]
சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்
செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையர் முனியசாமி அண்ணாநகர் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
9 வது முறையாக சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல். தொடர் இமெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
பயிற்சி போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை
காவல் துறையில் பணிகளை தாண்டி தங்கள் விருப்பம் உள்ள நற்செயலில் ஈடுபட வேண்டும். அதுபோல் செயல் மனதளவில் ஏற்ற இறக்கங்களை கடந்து செல்ல உதவும், 7 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் நேரடி டி.எஸ்.பி பயிற்சியை வண்டலூர் ஊனைமாஞ்சேரி உயர்காவல் பயிற்சியகத்தில் துவக்கிவைத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பேசினார்:- வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள உயர் காவல் பயிற்சியத்தில் 13வது பயிற்சி குழுவில் 7 பெண்கள்,15 ஆண்கள் உள்ளிட்ட 22 நேரடி டி.எஸ்.பி பயிற்சி வகுப்பை […]
டிஜிபி உத்தரவு:
தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி -க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இனி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் (SHO), இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும்.
டிஜிபி திரு.சங்கர் ஜிவால் பேட்டி காவல்துறையின் கண்ணியத்தை குலைக்கும் செயல் – இந்து முன்னணி கண்டனம்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் விஷயத்தில் தமிழக அரசு நிலைத் தடுமாறியுள்ளது. இந்நிலையில் நேற்று காவல்துறை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால் அவர்களின் பேட்டி துரதிருஷ்டவசமானது. திமுக தன்னை காப்பாற்றிக் கொள்ள காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. மேலும் டிஜிபி அவர்கள் பேட்டி அளித்த விதம் திமுகவினர் எழுதிக் கொடுத்ததைப் படித்தாரோ என் எண்ணத் தோன்றும் வகையில் திமுகவின் கருத்துக்களாகவே இருக்கிறது என்பதை சுட்டிக் […]
ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ – டிஜிபி விளக்கம்
ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன “ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல, அது வெறும் பரிசுப்பொருள் மட்டுமே” போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக்குடன் புகைப்படம் வெளியானது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது 10 CCTV கேமராக்களை ஸ்பான்சர் செய்தார் ஜாபர் சாதிக். போதைப்பொருள் வழக்கில் குற்றவாளி என தெரிந்ததும், அவர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம்.