சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் டிசம்பர் 11ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
கூல் லிப்: “குண்டர் சட்டத்தில் நடவடிக்கை தேவை”
‘கூல் லிப்’ உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும். தமிழ்நாட்டில் கூல் லிப்பால் பள்ளி மாணவர்கள் வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் அக்.24க்கு ஒத்திவைத்தது. குற்றம்சாட்டப்பட்ட 2,202 பேருக்கு நகல் வழங்க H முதற்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம்
ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர், முன்ஜாமின் கோரி திருப்பதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்
நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு பிரதிநிதிகள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் 34 வது தலைமை நீதிபதியாக கல்பாத்தி ஶ்ரீ ராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ராமேசுவரம் கோவில் குருக்கள், பணியாளர்கள் விவகாரம்: இந்து அறநிலையத்துறை மீது நீதிமன்றம் காட்டம்
ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம். இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள்
சென்னை முதன்மை அமர்வு நீதின்ற நீதிபதி கார்த்திகேயன்
செந்தில் பாலாஜி தரப்பின் பிணை உத்தரவாதத்தை ஏற்க சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் மறுப்பு
அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞருக்காக நீதிபதி காத்திருப்பு.
முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சிற்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கஞ்சா புழக்கம் போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து மோசமாக பேசியதாக கூறி நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது இதில் இரண்டு வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மேல்முறையீடு செய்திருந்தார். சிவி சண்முகத்தின் பேச்சின் விவகாரத்தை படித்து பார்த்த நீதிபதிகள் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு மோசமாக பேச முடிகிறது […]