தாம்பரம் அடுத்த சேலையூரில் பேக்கரி, பிரியாணி கடை உள்ளிட்ட அடுத்து அடுத்து 5 கடைகளில் பயங்கர தீவிபத்து, பதுக்கிய பட்டாசு வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை சேலையூர் காவல் நிலையம் அருகே ஹைதராபாத் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர்கடையில் இன்று ஏற்பட்ட தீ அடுத்துள்ள ஆரோக்கியா பேக்கரி, பர்னிச்சர் கடை, டீக்கடை, பெட் தயாரிக்கும் கடை என அடுத்து அடுத்து தீ பரவி எரிந்தது.

அப்போது கடைகளில் இருந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் உரிய நேரத்தில் வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதில் ஆரோக்கியா பேக்கரி குடோனில் தீபாவளிக்கு விற்பனை செய்தது போக மீதம் இருந்த பட்டாசுகளை பதுக்கியிருந்த நிலையில் தீவிபத்தில் பட்டாசுகளும் வெடித்து சிதறின. அதுபோல் எரிவாயு சிலிண்டர்களும் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் கடும் புகையும் ஏற்பட்டது.

இதனால் கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு முழுமையாக அணைத்தனர்.

இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணையை துவக்கிய நிலையில்

தீ விபத்திற்கு முறையான சமையலறை அமைக்காமல் பிரியாணி சமைத்ததும் காரணம் எனவும் அதுபோல் தீபாவளி பட்டாசுகளை குடோனில் பதுக்கியதால் தீ அதிக அளவு கொளுந்துவிட்டு பறவியது என முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.