
தாம்பரம் அருகே வடமாநில கூலி தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி
செல்போன் மற்றும் பணம் பறித்த மூன்று பேர் கைது
சேலையூர் ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன் (24) என்பவர்
மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று சேலையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உள்ளே வந்து கத்தியை காட்டி மிரட்டி கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளிகள் வைத்திருந்த 6 செல்போன்கள் மற்றும் 13 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சேலையூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து சேலையூர் பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த மணிகண்டன் (33), கொத்தனார் வேலை செய்து வந்த கர்ணா (25), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த அஜித் (எ) கீரல் (23) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று செல்போன்களை இரண்டு கத்திகள் பறிமுதல் செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.