
ஏழை எளியேரை நேசிக்கவே இயேசு பிரான் மண்ணில் அவதரித்தார். தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் அமைதி நிலவி சகோதரத்துவம் பெருக, அருட்தந்தை ஏ.டி.மைக்கல் சிறப்பு பிராத்தனை செய்தனர்.
502 ஆண்டுகள் பழமையான சென்னை புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு திருப்பலில் அருட்தந்தை ஏ.டி.மைக்கல் தலைமையில் நடைபெற்றது,
ஆலைய வளாகம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இயேசு பிறப்பை எல்.ஈ.டி திரையில் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியால் விடியோ காட்சி திரையிட்டுட்டு விளக்கப்பட்டது.

இதில் சுற்றுவட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்ற நிலையில் குழந்தை இயேசு பிறப்பை அறிவித்து குடிலில் வைத்து சிறப்பு பிராத்தனை செய்தனர்.
அதனையொட்டி உற்சமாக கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை அணிந்தவாறு உற்சாக நடனமாடி கொண்டாட்டினார்கள்.