
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி மரணமடைந்தது நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வெள்ளைப்புலி உயிரிழந்தது.
இதேபோல பூங்காவில் பரா மரிக்கப்பட்டு வந்த 22 வயதான ரமேஷ் என்ற சிறுத்தை வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர் இருப்பி னும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறுத்தை பரிதாபமாக இறந் தது. உயிரிழந்த வெள்ளைப்புலி மற்றும் சிறுத்தையை மீட்ட ஊழியர்கள் பூங்கா வளாகத் தில் உள்ள விலங்குகள் ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோதனைக்
காக அனுப்பி வைத்தனர். .
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு பெண் சிங்கமும் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந் தது. வெள்ளைப்புலி அனுவை நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018-ம் ஆண்டு 6 மாத காலம் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத் தில் சிங்கம், சிறுத்தை வெள் ளைப்புலி உயிரிழந்ததால் பூங் காவில் பரபரப்பு ஏற்பட்டது.