
சிட்லபாக்கம் MGR நகர், தாங்கள் கரை தெருவில் வசித்து வரும் கூலி வேலை செய்யும் திரு.பெருமாள் என்பவரின் வாடகைக்கு இருந்த இல்லம் மின்கசுவின் காரணத்தினால் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இதனை அறிந்த நம் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் மற்றும் பரிமளா சிட்டிபாபு அவர்கள் மற்றும் திரு.பா.பிரதாப் அவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திர்க்கு உடுப்புகள் மற்றும் பண உதவி அளித்ததுடன் மன தைரியம் கொடுத்தனர்.