
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் 78,000 புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளது. 6000 மெகாவாட் அளவிற்கு கூடுதலாக மின் தேவை இருக்கும் என்பதால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறப்பட்டு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 500 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யும் நிலைகளை மாற்றி தமிழ்நாடு மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.