சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் குரோம்பேட்டை பகுதியில் அரசு பொது மருத்துவமனை மற்றும் நெஞ்சக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது கனமழை காரணமாக பொது மருத்துவமனை தரைதளத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்

குறிப்பாக குரோம்பேட்டை பகுதியில் உள்ள டிபி மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் கடும் அவதடைந்து வருகின்றனர் வாகனங்கள் நீரில் மிதந்தவாறு வெளியே வந்து கொண்டிருக்கிறது அது மட்டும் இன்றி அதன் அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை தளத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் அருகில் உள்ள புதிய கட்டிடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இருப்பினும்

தரைத்தளத்தில் இயங்கி வரும் இசிஜி பிரிவு அங்கேயே செயல்பட்டு வருகிறது இதனால் நோயாளிகள் மழை நீரில் நடந்து சென்று சோதனை செய்த அறிக்கைகளை பெற்று வருகின்றனர் மேலும் முதல் தளத்தில் சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதால் குரோம்பேட்டை காவல் துறையினர் மணல் முட்டைகளைக் கொண்டு மருத்துவமனைக்குள் தண்ணீர் வராமல் அடுக்கி வருகின்றனர் இருப்பினும் மருத்துவமனை தாழ்வாக இருப்பதால் மழை நீர் மருத்துவமனைக்குள் புகுந்து கடும் அவதி அடைந்து வருகின்றனர் தரைத்தளத்தில் உள்ள மருந்து வழங்கும் பிரிவு முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது…‌

மேலும் மருந்து வழங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க அருகில் உள்ள புதிய கட்டிடத்தில் மருந்தகம் அமைக்கப்பட்டது.