சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரான என்.சங்கரையா சில தினங்களுக்கு முன் காலமானர்.

இந்த நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜி.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், இந்திரன், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிராபானு நாசர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதில் தாம்பரம் மாநகராட்சியின் 2 வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மறைந்த சங்கரையாவிற்கு புகழ் சேர்க்கும் விதமாக அவர் வாழ்ந்த நியுகாலணி பகுதிக்கு சங்கரையா நகர் என பெயரிட வேண்டும் என்கிற சிறப்பு தீர்மானத்தை முன்வைத்தார். மேலும் அதற்கான கோரிக்கை மனுவை மேயர், துணை மேயர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளிடமும் வழங்கினார். அப்போது அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

முன்னதாக என்.சங்கரையா மறைவுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது கூட்டம் நடைபெற்றபோது தாம்பரம் மாநகராட்சி ஒன்றாவது மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி பேசும்போது, ஒப்பந்ததாரர்கள் பணி நிறைவு சான்றிதழ் பெற்று 7 மாதங்கள் ஆனாலும் அவர்களுக்கு உரிய பில் தொகை வழங்காததால் புதிய வேலைகளை மேற்கொள்ள முன்வருவதில்லை இதனால் தண்ணீர் வினியோகம், பராமரிப்பு, உள்கட்டமைப்பு பணிகள் பாதிப்பு அடைகிறது இதற்கு அரசு அதிகாரிகள் அலட்சியமாக பில் தொகைக்கு ஒப்பந்த பணி மேற்கொள்பவர்களை அழைகழிப்பது தான் காரணம்,

இதனால் மக்களை நேரிடையாக சந்திக்கும் மக்கள் பிரிதி நிதிகளை மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என கூறினார்.

அதற்கு 5 வது மண்டல தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாமன்ற உறுப்பினர்களும் இதே கருத்தை முன்வைத்து மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து உரத்த குரலில் பேசினார்கள்…