ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்

நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டம். நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை மாற்றுகிறது மத்திய அரசு. குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் 60 ரேசன் கடைகளின் பெயரை சோதனை முயற்சியாக மாற்ற திட்டம்.

பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை

பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என நாடார் சங்கங்கள் கோரிக்கை பெருங்க்ளத்தூரில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவி பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை […]

மேற்கு வங்க சரணாலயத்தில் உள்ள அக்பர், சீதா ஆகிய சிங்கங்களின் பெயரை மாற்றுமாறு மாநில அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

விலங்குகளுக்கு வைக்கப்படும் பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் உள்ளிட்ட எந்த மதத்தையும் சார்ந்த பெயரை வைக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தல்

குரோம்பேட்டை நியூ காலனிக்கு சங்கரய்யா பெயர் மாநகராட்சி தீர்மானம்

சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரான என்.சங்கரையா சில தினங்களுக்கு முன் காலமானர். இந்த நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜி.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், இந்திரன், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிராபானு நாசர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் தாம்பரம் மாநகராட்சியின் 2 வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மறைந்த சங்கரையாவிற்கு புகழ் சேர்க்கும் விதமாக […]

அண்ணா பல்கலைக் கழகம்-பெயர் மாற்றம் ஏன்?

இன்று அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட தினம்.அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம்1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4, இல்,“பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” என உருவாக்கப்பட்டது.பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து ‘பேரறிஞர்’ மற்றும் ‘தொழில்நுட்ப’ ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு “அண்ணா பல்கலைக்கழகம் ” என்று பெயர் மாற்றப்பட்டது. ஏனிந்த பெயர் மாற்றம்?அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட மசோதா […]

சந்திராயன் – 3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி எனபெயர் சூட்டிய மோடி

இந்திய விண்கலம் சந்திராயன் -3 நிலவில் இறங்கி சாதனை படைத்து உள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் செயற்கைக்கோளின் லேண்டர் இறங்கிய இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சிவசக்தி முனை என்று பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். நேற்று அவர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்தபோது இந்த பெயரை சூட்டினார். இதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சந்திராயன் 2- இறங்கிய இடத்திற்கு திரங்கா (மூவர்ண கொடி) என்று மோடி பெயர் சூட்டியுள்ளார்.