
குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடுத்து அடுத்து ரயில் மோதியதில் இருவர் உயிரிழப்பு
சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு இரண்டு இளைஞர்களின் சடலம் கிடப்பதாக இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரனையில்,
ஒருவர் சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும் மற்றொருவர் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரனவ் என்பதும் சதிஷ் நுங்கபாக்கத்தில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வந்ததும் ,பிரனவ் ராயபுரம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும்
நேற்று இரவு பணியை முடித்துவிட்டு கவனகுறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த டின்சுக்கியா ரயில் அடுத்து அடுத்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.