குரோம்பேட்டை போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.

இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரைதளத்தில் குடியிருந்து வருகிறார்..
மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்
வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றார்..

இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாலதி ராணி வீட்டில் சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப் பட்டு அதிலிருந்து எட்டு சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது அதேபோல வாடகைக்கு குடி இருந்த பால அரவிந்த் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 16,சவரன் தங்க நகைகளை அதே நபர் கொள்ளை அடித்துச் சென்றதும் தெரிய வந்தது.

உடனே இந்த சம்பவ குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் அதன் பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள..

பட்ட பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..