ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், அவலாஞ்சி, அப்பர்பவானி, குன்னூர், கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் கடும் உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. ஊட்டி தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்சமாக மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

குறிப்பாக காலை நேரத்தில் குட்டி காஷ்மீரை போல் ஊட்டி தலைகுந்தா பகுதி காணப்படுகிறது. வழக்கமாக இந்த குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருக்கும். இந்த ஆண்டு இப்பகுதியில் உறை பனிப்பொழிவு ரீல்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு தலைகுந்தா பகுதியும் பிரபலமாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் உறை பனிப்பொழிவை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.