
காமதேனுவின் படத்தை வாங்கும் பொழுது காமதேனு அதன் கன்றுடன் இருப்பது போலவோ அல்லது கன்று பால் குடிப்பது போலவோ இருக்குமாறு வாங்க வேண்டும். காமதேனுவின் படத்தை நம் வீட்டு பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். மேலும் காம தேனு படத்திற்கு மேலாகவோ, கீழா கவோ வேறு எந்த தெய்வங்களின் படங்களையும் வைக்கக் கூடாது. தினமும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து காமதேனுவை பார்த்து மனதார நாம் பிரார்த்தனை செய்து கொண்டு நம்முடைய அன்றாட வேலைகளை தொடங் கும் பட்சத்தில் நாம் செய்யக் கூடிய அனைத்து காரியங்களிலும் நமக்கு வெற்றிகள் கிட்டும்.
காமதேனு பூஜை:
வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்ய வேண் டும். காமதேனுவின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைக்க வேண்டும். அந்த தாம் பாளத்தில் சிறிது மஞ்சள், குங்குமம், சந்தனம் மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். (ஆராத்தி போல்) பிறகு அதில் வெண்தாமரை மலர் ஒன்றை வைக்க வேண்டும். அந்த வெண்தாமரை மலரில் நாம் குங்கு மத்தை வைத்து “ஓம் காமதே னுவே நமஹ” என்று 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தூபதீப ஆராதனை காட்டி பூஜையை முடித்து விட வேண்டும். தாமரையில் போட்ட குங்குமத்தை நாம் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் அந்த குங்கு மத்தை நாம் நெற்றியில் வைக்கலாம். பூ வாடியதும் அந்தப்பூவையும், ஆரத்தியையும் கால் படாத இடத்தில் வைத்து விட வேண்டும். சிலையாக வைத்து வழிபடுபவர்கள், அந்த சிலையை தாம்பாளத்தின் நடுவில் வைத்து இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.
பலன்கள்:
அனைத்து விதமான செல்வ செழிப்புகளும் நமக்கு ஏற்படும். அஷ்டலட் சுமிகளின் கடாட்சம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமைகள் மேலோங்கும். மன நிம்மதி கிடைக்கும். சிறப்பான வாழ்க்கை அமையும். தொழில் ஸ்தாபனங்களில் வைத்து வழிபடுவதன் மூலம் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். தொழில் விருத்தி ஏற்படும். தொழிலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். காமதேனுவை பூஜிப்பதால் அனைத்து தெய்வங்களையும் பூஜிப்பதற்கு உரிய பலனை பெற்று அனைத்து விதமான நன்மைகளையும் அடைவோம்.