பெண்கள் செய்யக்கூடிய மிகவும் எளிமையான உடற்பயிற்சிகள்: உடற்பயிற்சி என்பது எல் லோருக்குமே மிகவும் முக்கிய மான ஒன்று. உடற்பயிற்சி நமது உடலை வலுவாகவும் ஆரோக்கி யமாகவும் வைக்க உதவும். அதோடு சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஆனால் பெண்கள் வீட்டு வேலை, வெளி வேலை என பிசியாக இருப்பதால், உடற் பயிற்சிக்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருப்பது இல்லை. அப்படி நேரம் இல்லாத பெண்கள், தினமும் ஒரு 30 நிமிடம் ஒதுக்கி, குறைந்தபட்சம் 2 உடற் பயிற்சிகளையாவது மேற்கொள்ளலாம். 1.பெண்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு 30 நிமிடம் ஒதுக்கி நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி நம்மது நன்மையை தரும் ஒரு எளிமையான பயிற்சியாகும். இது நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும், மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. வாரத்தில் ஒருநாள் விடுமுறையாக வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள 6 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவும். 2.எடை தூக்கும் பயிற்சியை ஆண்களுக்கானது என பெண்கள் முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் எந்த பயிற்சியும் இது இவர்களுக்கானது என ஒதுக்கப்படவில்லை. எடை தூக்குதலை பெண்களும் மேற்கொள்ளலாம். இந்த பயிற்சி உடலை வலிமையாக்க உதவுகிறது. வாரத்தில் இரண்டு முறையாவது எடை தூக்கும் பயிற்சியை செய்யவும். மேலும், இந்த பயிற்சிக்கு பெண்கள் ஒரு மணி நேரம் ஒதுக்க தேவையில்லை. 20 முதல் 30 நிமிடங்கள் போதுமானது.