மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வோர், இனி கட்டாயமாக உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்ற தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இடியாப்பம் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், அந்த உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இடியாப்பம் தயாரிக்கும் போது சுத்தமான சூழலில், தரமான பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக தயாரிக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. ஒரு சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள் விற்பனை செய்வதாக வெளியான தகவலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு மூலம் உணவுகளின் தரம் மேம்படுவதுடன், பொதுமக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.