
வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை வெளிச்சம் கிராமத்தில் சூர்யாவின் 45 வது திரைப்படம் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் படைபைப்பு நடத்தப்பட்டது.
வெளிச்சம் கிராமத்தில் சாலையை மறித்து ராட்சத கிரேன் மூலம் சாலை நடுவே நிறுத்தப்பட்டு இரவு பகலாக படபிடிப்பு நடத்தப்பட்டு வந்தது, இதனால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பு நிறுவன குழுவுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வெளிச்சம் கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அவிடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தபட்டது.
முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆர். ஜே பாலாஜியிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் சூர்யாவின் 45 ஆவது படப்பிடிப்பு படத்திலேயே நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது