தாம்பரம் அருகே நன்மங்கலம் ஏரிப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது நீதிபதிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு எப்படி இணைப்பு கொடுத்தீர்கள் என்று விளக்கம் தருமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதில் தாம்பரம் மாநகராட்சியையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.